கதிரவன் எரிந்து, கருகிச் சுருங்கி மறையும் நாளில்...

NASA’s Spitzer Maps Climate Patterns on a Super-Earth
Observations from NASA's Spitzer Space Telescope have  led to the first temperature map of a super-Earth planet --  a rocky planet nearly two times as big as ours...
[Credits: NASA/JPL-Caltech.  #nasa #esa #spaceexploration]
Animated Photo
The Image:
This animated illustration shows one possible scenario for  the rocky exoplanet 55 Cancri e, nearly two times the size of  Earth. New Spitzer data show that one side of the planet is  much hotter than the other – which could be explained by a  possible presence of lava pools. 
கதிரவனில் பிண்டுப் பிரிந்ததேநம் பூமி! 
                               [A Scientific reality]

அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் ஆங்காங்கே
குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரல்கள்
திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனில் 
பிண்டுப் பரிந்ததேநம் பூமி!

Thanks :       Dinakaran  for published through  the
                      Tamil Daily E-Mail News, 31.3.2012


கதிரவன்  எரிந்து,
கருகிச் சுருங்கி,
மறையும் நாளில்,
மதியொளி இழக்கும்!

தூசிப் படலம்,
வானில் பரவும்;
இரவும் பகலும்,
இல்லா(துஇருளும்!

கடலலை நிற்கும்;
கடுங்குளிர் பிறக்கும்;
பூமிப் பரப்பை,
பெரும்பனி மூடும்!

பனிப்பொடி உள்ளே,          
மானுடம் உறையும்;
கனிக்கொடிசெடிமரம்,                   
கருகிப் புதையும்!

கற்களில் செதுக்கிய,
கலை ஆலையங்கள்,
உலோகச் சிலைகள்...
சிதையா(துமிழும்!

வேறொரு கிரக
மானுடம் அனுப்பிய
பறக்கும் தட்டு
பூமியைச் சுற்றும்!


புவனம் முழுமையும்,
புகைப்படம் எடுக்கும்;
அவனி மண்ணை,
ஆய்வும் செய்யும்!

உயிர்கள் வாழும்...
பதத்தில் அகிலம்,
துயில்வதை உணர்ந்து,
உள்ளம் உவந்து!

செத்த ஆதவனை,
ஆய்வறி வாலே,   
உயிர்பெறச் செய்யும்!

ஒளிவெப்பம் தெரிக்கும்!
பார்-எங்கும் படிந்த,
பனித்தளம் உருகும்;
கொடிசெடி மரங்கள்,
மெதுவாய் தளிரும்!

மானுடம் மீண்டும்... 
 பலமதம் படைத்து,
 மொழிஇனம் பிரித்து,
 மோதல்கள் செய்து,
 மடிந்திட உயிர்க்கும்!  


Thanks:    Dinakaran  for published through  the Tamil Daily E-Mail News, News, 31.3.2012 
[Verses from  ... 
thoughts!]

Public

14h
Photo

Comments

Popular posts from this blog

அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?

If no farmers' field work, never more birth!

என்தேக ஓசோன் படலமே!